17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரசலூர் ஊராட்சியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கிருமிநாசினி  தெளிப்பு- எம். எல். ஏ. பவுன்ராஜ் தொடங்கி வைத்தார் 

பரசலூர் ஊராட்சியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கிருமிநாசினி  தெளிப்பு- எம். எல். ஏ. பவுன்ராஜ் தொடங்கி வைத்தார் 

எழுதியவர்: mohan April 19, 2020, 3:31 pm

செம்பனார்கோயில்  ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பரசலூர் ஊராட்சி பகுதியில்  வாகன மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை எம்.எல்.ஏ. பவுன்ராஜ்  தொடங்கி வைத்தார்.

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பரசலூர் ஊராட்சி பகுதி முழுவதும் டிராக்டர் மூலம் வீடுகள், வணிக வளாகம், பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும்  இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கினார். அவருடன் செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன்,ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் மற்றும் ஊராட்சி செயலாளர் மனோகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!