இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அனைவரும் தனித்திருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. அதிலும் 3 அடுக்குகள் கொண்ட முக கவசத்தை மட்டுமே வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். இன்றளவில்
அனைத்து மருந்து கடைகளிலும் முக கவசம் கிடைக்கிறது அதை ஒன்று அல்லது சில முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் பயன்படுத்திவிட்டு துவைத்து மறுமுறை பயன்படுத்தும் வகையில் உலக தரம் வாய்ந்த முக கவசத்தை (HYPASHIELD OUTDOOR MASK) மயிலாடுதுறை ஏ.டி.எஸ் நிறுவனம் இறைக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. மூன்று அடுக்குகள் கொண்ட இந்த முக கவசத்தை 30 முறை துவைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தேவைப்படுவோர் மயிலாடுதுறை ரயிலடியில் உள்ள ஏ.டி.எஸ் ஏஜென்சிஸ் அலுவலகத்தை நேரில் அணுகலம். மேலும் தகவல் அறிய 9360333999 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை.




You must be logged in to post a comment.