கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறையினர் பலமுறை அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இதுவரை மதுரை மாநகரில் 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 4687 நபர்கள் மீது 4414 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 2720 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவை மீறிய நபர்கள் மீது வழக்கு பதிவு
எழுதியவர்: mohan April 19, 2020, 3:13 pm




You must be logged in to post a comment.