தரங்கம்பாடி தாலுக்கா, அரும்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக இரண்டு கடைகள் தீக்கிரையானது.அரும்பாக்கம் கடைவீதியில் வாடகை கட்டடத்தில் தனசேகரன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக உணவு விடுதி மற்றும் தேனீர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடையில் சனிக்கிழமை மாலை மின்கசிவு காரணமாக தீ பற்றி அருகில் உள்ள கண்ணன் என்பவர் நடத்தி வரும் பூக்கடையும் பரவி இரண்டு கடைகள் எரிந்து நாசமாகின. இது குறித்து பெரம்பூர் காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் கடை உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
இரா.யோகுதாஸ் மயிலாடுதுறை,




You must be logged in to post a comment.