மதுரை மாவட்டம் தேனி பிரதான சாலை விராட்டிபத்து அருகே இரண்டு பனை மரங்கள் தீப்பற்றி எரிவதாக மதுரை தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையான குழுவினர் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த இரண்டு பனை மரத்தையும் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அருகில் உள்ள மற்ற மரங்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினரின் செயல்பாட்டால் பல மரங்கள் தப்பியது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.