செங்கத்தில் 144 தடை உத்தரவால் கூடுதல் விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை என “கீழை நியூஸில்” செய்தி வெளியிட்டிருந்தோம் இதன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் செங்கம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் கரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார் பின்னர் அத்தியவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கும் விற்பனையாளர்களை கைது மேற்கொள்ளும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.புதிய பேருந்து நிலையம், மெயின்ரோடு மில்லத் நகர் போன்ற பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது வட்டாட்சியர் ஏ .எஸ். பார்த்தசாரதி ,மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ் மற்றும் செங்கம் ஆய்வாளர் சாலமன் ராஜா, வருவாய்த்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்




You must be logged in to post a comment.