18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கம் சார்பாக 50 மீனவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கல்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கம் சார்பாக 50 மீனவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கல்.

எழுதியவர்: mohan April 19, 2020, 1:13 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மண்டபம் ஒன்றியம் இராமேஸ்வரம் கடற்கரை மாரியம்மன் நகர், புது ரோடு,தங்கச்சிமடம் ,மாந்தோப்பு மீனவ கிராமங்களில் கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் இன்று 19.4.20 வழங்கப்பட்டது.கொரோனா நோய்கிருமியால் 144 தடை உத்தரவு மத்திய மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டது. இந்த 144 தடை உத்தரவால் இராமேஸ்வரம் பகுதி கிராமங்களைச் சேர்ந்த மீனவ குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் பாதை நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் மக்கள்பாதை இயக்கத்தின் வழிகாட்டி உ.சகாயம் இ.ஆ.ப அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இப்பகுதியில் வேலைவாய்ப்பு இன்றிய விதவைகள்,ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் என 50 மீனவ குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.தனி மனித இடைவெளியை பின்பற்றி நிவாரண பொருட்களை ஓரிடத்தில் வைத்து பயனாளிகளே பொருட்களை எடுத்துச் செல்லுமாறு நிவாரண உதவி வழங்கப்பட்டது.நிவாரண பொருட்களுக்கு விவசாய தோழமை இயக்க நிர்வாகிகள் உதவினர்.இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் கிளாட்வின், மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் இராமு, தங்கச்சிமடம் ஒன்றிய பொறுப்பாளர் அந்தோணிதீனா, மக்கள் பாதை தன்னார்வலர்கள் ஆனந்த், இருளேஸ்வரன் மற்றும் பேராசிரியர் ராம்ராஜ் , மீனவ மகளிர் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!