மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவேரிப்பூம்பட்டினம், வானகிரி ,பூம்புகார். ஊராட்சிகளில் பணிபுரியக்கூடிய தூய்மைப் பணியாளர்களுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் சொந்த செலவில் தலா ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி காய்கறிகள் முகக் கவசங்கள் வழங்கினர். பின்பு தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அவர்கள் செய்யக்கூடிய பணியை பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தி பேசினார்.
தூய்மைப் பணியாளர்களின் தொண்டு இந்த நாட்டுக்கு மிக முக்கியமான ஒன்று இந்த உலகமே உங்களை பாராட்டுகிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் சீர்காழி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை,







You must be logged in to post a comment.