17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடி, உலகின் அதி பணக்கார மனிதர் முகேஷ் அம்பானி பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 19, 1957).

இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடி, உலகின் அதி பணக்கார மனிதர் முகேஷ் அம்பானி பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 19, 1957).

எழுதியவர்: mohan April 19, 2020, 10:37 am

முகேஷ் அம்பானி ஏப்ரல் 19, 1957ல் திருபாய் அம்பானியின் மூத்த மகனாக மும்பையில் பிறந்தார். இவருக்கு அனில் அம்பானி என்று ஒரு சகோதரனும், தீப்தீ சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். அம்பானியின் குடும்பம் 1970 வரை மும்பை புலீஸ்வரில் உள்ள இரண்டு படுக்கையறை கொண்ட குடியிருப்பில் வசித்து வந்தது. திருபாய் அம்பானி பின்னர் கொலாபா உள்ள ‘ஸீ வின்ட்’ என்றழைக்கப்படும் 14-மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார். சமீப காலம் வரை முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி அவர்களின் குடும்பங்களுடன் இங்கு வெவ்வேறு தளங்களில் வசித்து வருகின்றனர்.

முகேஷ் அம்பானி தனது ஆரம்ப கல்வியை மும்பையில் உள்ள அபே மொரிச்சா பள்ளியிலும், தனது இரசாயன பொறியியல் பட்டப்படிப்பை இன்ஸ்டிடுட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி மும்பை என்று அழைக்கப்படும் யுடிசிடீயிலும் முடிததார். இவர் பல்கலைக்கழக தேர்வில் ஆறாவது இடத்தை பிடித்தார். முகேஷ் பின்னர் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகதில் எம்பிஏ எனப்படும் இரண்டு ஆண்டு திட்ட படிப்பில் சேர்ந்தார். ஆனால் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் 1980ல் படிப்பைக் கைவிட்டார். இந்திரா காந்தியி்ன் நிர்வாகம் 1980 இன் முற்பகுதியில் பாலியஸ்டர் இழை நூல் (PFY) உற்பத்தியில் தனியார் துறைகளை ஊக்குவித்தது. திருபாய் அம்பானி அவர்கள் பாலியஸ்டர் இழை நூல் உற்பத்தி செயயும் ஆலை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். டாடா, பிர்லா மற்றும் 43 இதர போட்டியளர்களுக்கு மத்தியில் திருபாய் அம்பானி அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

பாலியஸ்டர் இழை நூல் உற்பத்தி ஆலையின் உருவாக்கத்தில் உதவுவதற்காக திருபாய், அவரது மூத்த மகன் முகேஷ்யை எம்.பி.ஏ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அழைத்துவந்தார். முகேஷ் அம்பானி, அவருடைய தந்தைக்கு உதவுவதற்காகவும் ரிலயன்ஸ்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலியஸ்டர் இழைகள் மற்றும் 1981ல் தொடங்கிய பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையி்ன் ஆரம்பத்திற்காகவும் தனது படிப்பை பாதியிலேயே கைவிட்டார். இவர் 1981ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசில் சேர்ந்தார். இவரது பயணம் ஒருங்கிணைந்த ரிலையன்ஸ் இன் ஆரம்ப நிலையான நெசவு தொழிலிருந்து பாலியஸ்டர் இழைகள் உற்பத்தியில் தொடங்கி மேலும் பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சியாக தொடர்ந்து விரிவடைந்தது.

அம்பானி, உலகின் மிகப்பெரிய மற்றும் பல பாகங்களை கொண்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளை கொண்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவினார். உலகின் மிகப்பெரிய அடித்தள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவின் ஜாம்நகரில் உள்ளது. இதன் தற்போதைய சுத்திகரிப்பு திறன் ஒரு நாளைக்கு 660,000 பீப்பாய்கள் (வருடத்திற்கு 33 மில்லியன் டன்கள்). மேலும் இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோகெமிக்கல், மின் உற்பத்தி, துறைமுகம் மற்றும் இவைகளின் தொடர்புடைய உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளின் நிர்வாகத்தை இயக்குபவராகவும் மற்றும் வழிவகுத்து நடத்தி செல்பவராகவும் அம்பானி உள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான ஆர்.ஐ.எல் அதன் பங்குச் சந்தை மதிப்பு மற்றும் விற்பனை அளவில் மதிப்புமிக்க நிறுவனமாக விளங்குகிறது. இவர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தனக்கு சொந்தமாக 44.7% பங்கை கொண்டுள்ளார். மேலும் உலகின் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் இயக்குபவர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு துறை உரிமையாளர் ஆவார். அம்பானி குடும்பம் இந்தியாவிலேயே பணக்கார குடும்பமாகும். மேலும் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றிறுக்கிறார். இவர்கள் தங்கள் செல்வத்தை ஒட்டு மொத்தமாக ரிலையன்ஸ் இந்திய குழுமத்தின் நிறுவுனரான திருபாய் அம்பானி அவர்களிடமிருந்து வாரிசாக பெற்றனர்.

2010 ல் ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ் வெளியிடும் முக்கியமான 68 நபர்கள் பட்டியலில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள் மத்தியில் இவர் இடம் பெற்றார். மேலும் 2012 ல் இவர் ஆசியாவில் இரண்டாவது பணக்கார மனிதராகவும், உலகில் 19 வது பணக்கார மனிதராகவும் இடம்பெற்ற இவரது தனிப்பட்ட சொத்தின் மதிப்பு அமெரிக்க டாலர் ($) 22.3 பில்லியன் ஆகும். 2007 ல் இந்திய பங்கு சந்தையில் ஏற்படட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் உயர்ந்தது. இதன் காரணமாக இவர் உலகின் அதி பணக்கார மனிதராக அறியப்பட்டார். இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குநர்கள் குழுவில் ஒரு உறுப்பினராவார். சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் தற்போதைய உறுப்பினராகவும் உள்ளார். அம்பானி இந்திய பிரீமியர் லீக் உள்நாட்டு கிரிக்கெட் கிளபின் மும்பை இந்தியன்ஸ் அனியின் உரிமையாளர் ஆவார்.

2010ல் ஆசியா பொதுநல ஸ்தாபன அமைப்பின் மூலம் பிரதான விருந்தில் குளோபல் விஷன் விருது, என்.டி.டி.வி (இந்தியா) மூலம் 2010 ஆம் ஆண்டின் சிறந்த வர்த்தக தலைவர் விருது, பைனான்சியல் குரோனிக்கிள் அமைப்பின் மூலம் 2010 ஆம் ஆண்டின் தொழிலதிபர் விருது, ஜுரான் தர பதக்கம், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூலம் ‘பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக பள்ளித்தலைவர் பதக்கம், அமெரிக்க இந்திய வர்த்தக ஆலோசனை சபை மூலம் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் விருது, குஜராத் அரசிடம் இருந்து 2007 ஆம் ஆண்டிற்கான சித்திரலேகா நபர் விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

முகேஷ் அம்பானியின் தொழில் வளர்ச்சிக்கு முன்னால், இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானி’ என்னும் மிகப்பெரிய தொழில் பின்னணி இருந்தாலும், தன்னுடைய திறமையான வர்த்தகச் சிந்தனையால், லாபம் தரும் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, இந்தியாவின் நவீனத் தொழில்நுட்பத் துறையின் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார். 2007 ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் அதிகரித்ததின் காரணமாக இவர், ‘உலக பணக்கார மனிதர்’ எனவும் அறியப்படுகிறார். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!