மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மதுரை மாநகரில் 300 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு மிகவும் சிறந்த முறையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் சசிக்குமார் தெப்பக்குளம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்தில் தன்னார்வலராக இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். காவல் ஆணையரின் ஆலோசனைப்படி திரைப்பட நடிகர் சசிக்குமார் மதுரை மாநகர பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முடிவுசெய்து இந்த காணொளியை அளித்துள்ளார்கள்.
அனைவரும் அரசு உத்தரவுகளையும் காவல்துறையின் அறிவுறைகளையும் பின்பற்றும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார். மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் இம்முயற்சி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.