18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை நகர காங்கிரஸ், வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி-தாசில்தார் முன்னிலையில் வழங்கல்..

சுரண்டை நகர காங்கிரஸ், வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி-தாசில்தார் முன்னிலையில் வழங்கல்..

எழுதியவர்: Askar April 18, 2020, 9:57 pm

சுரண்டை நகர காங்கிரஸ், வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி-தாசில்தார் முன்னிலையில் வழங்கல்..

சுரண்டையில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா ஊரடங்கு நீட்டிப்பை தொடர்ந்து நிவாரண உதவி தாசில்தார் ஹரிகரன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் மற்றும் வியாபாரிகள் சார்பில் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட 100க்கும் அதிகமான எளிய, ஆதரவற்ற, மாற்றுத் திறனாளிகள், மற்றும் முதியோர் குடும்பங்களுக்கு அரிசி, மசாலா பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் முககவசம்  வழங்கப்பட்டது.

இதனை  நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் ஆலோசனையின் படி நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், மாவட்ட துணைத் தலைவர் பால் (எ) சண்முகவேல், மாவட்ட துணை செயலாளர் ஏகேஎஸ்டி சேர்மசெல்வம்,  வார்டு தலைவர் பால்வண்ணசாமி,  முருகேசன், வட்டார செயலாளர் தெய்வேந்திரன், மாடக்கண்ணு, ரமேஷ், சமுத்திரகனி, தெய்வேந்திரன் உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினர்.

அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்கவும், சமூக விலகலோடு இருக்கவும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி சுத்தமாக இருந்திடவும் அறிவுறுத்தினர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!