இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி விமலா. இவர்களது மகன்கள் கிளின்டன் (எ) பால்ராஜ், நேசக்குமார். இவர்கள் வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சி வந்துள்ளனர்.
தகவலின் பேரில், முதுகுளத்தூர் டிஎஸ்பி ராஜேஷ், மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி பொன்.ரகு, முதுகுளத்தூர் ஆய்வாளர் சோமசுந்தரம், மற்றும் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது விமலா வீட்டில் 25 லிட்டர் கேன்களில் சாராயம் ஊறல் போடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 2 லிட்டர் விஷ சாராயம் இருந்தது தெரிய வந்தது. சாராயத்தை சுலபமாக காய்ச்ச, குக்கரை பயன்படுத்தினர். குக்கர் விசில் சத்தம் அடிக்கடி ஒலித்ததால் சாராய நாற்றத்தை அடுத்து குக்கர், சாராயத்தை தேரிருவேலி போலீசார் பறிமுதல் செய்தனர்.
சாராயம் காய்ச்சுவது தெரிந்து போலீசார் வருவதை அறிந்த விமலா, அவரது மகன்கள் பால்ராஜ் , நேசக்குமார் ஆகியோர் தப்பி ஓடினர். போலீசார் கைப்பற்றி சாராய ஊறல், விஷ சாராயத்தை கொட்டி அழித்தனர்.






You must be logged in to post a comment.