ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் கூலி வேலை செய்யும் மக்கள் அன்றாட தொழில் செய்யும் பொதுமக்கள் நரிக்குறவ மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்…..
இந்நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தின் கண்காணிப்பாளர் ராஜாவின் உத்தரவுக்கு இணங்க பாஜக மருத்துவரணி செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் 100 பேருக்கு மேற்பட்ட நரிக்குறவர்களின் தேவையான 25 கிலோ கொண்ட அரிசி பைகள் 20 மூட்டையும் 100 கிலோ கொண்ட தக்காளி வெங்காயம் காய்கறி கொண்ட அஞ்சு மூட்டைகளும் வழங்கப்பட்டது. இதற்கு முன்பாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து நரிக்குறவர் மக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. நரிக்குறவர் மக்களுக்கு உதவிய பாஜக மாவட்ட செயலாளர் .விஜய பாண்டியனுக்கு நரிக்குறவர்களின் சம்பிரதாயப்படி மாலைகள் அணிவித்து கௌரவித்தனர்.
உசிலை சிந்தனியா






You must be logged in to post a comment.