இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி, ஆனந்தூர் ஊராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதிகளில் கூடுதல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் இன்று ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து இதுவரை இராமநாதபுரம்
மாவட்டத்திற்கு 4,777 பேர் திரும்பியுள்ளனர். அவர்களில் இன்றைய நிலவரப்படி (18.4.2020) 96 பேர், அவரவர் குடும்பத்தாருடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எஞ்சிய 4,681 பேர் 28 நாட்கள் தனிமைப்படுத்தும் காலம் நிறைவடைந்து கொரோனா தொற்று அறிகுறி இன்றி நலமாக உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 737 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது எனவும், 301 பேருக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 426 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் இதுவரை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 10 பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பரமக்குடியைச் சார்ந்த 2 பேர் பூரண குணமடைந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு சீரான உடல்நிலையில் உள்ளனர் என்றார். இராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, ராமநாதபுரம் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் பி.அஜித் பிரபு குமார், தாசில்தார்கள் வி.முருகவேல் (ராமநாதபுரம்), பெ.சாந்தி (ஆர்.எஸ்.மங்கலம்), பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மாடசாமி சுந்தர்ராஜ், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் கி.ஜெகநாதன், இளநிலை உதவியாளர் சுப.முனியசாமி, மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மண்டபம் அரசு டாக்டர்கள் பாக்யநாதன், தாமோதரன், சுகாதார ஆய்வாளர் மெய்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட மண்டபம், ஆனந்தூர் பகுதிகளில் இராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு
எழுதியவர்: mohan April 18, 2020, 6:36 pm




You must be logged in to post a comment.