18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜக்காபட்டி- வீடுதேடிச் சென்று உதவி செய்த பெண் ஊராட்சி மன்ற தலைவர்.

ராஜக்காபட்டி- வீடுதேடிச் சென்று உதவி செய்த பெண் ஊராட்சி மன்ற தலைவர்.

எழுதியவர்: mohan April 18, 2020, 6:12 pm

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமல்லாது தமிழகத்தையும் விட்டு வைக்க வில்லை, இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள சூழலில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

அத்யாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தி உள்ளனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சித்ரா . தனது ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களில் நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு தனது சொந்த செலவில் வீடு வீடாக தேடிச் சென்று அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறிகளை வழங்கினார்.வீடு தேடி வந்து உதவி செய்த சித்ராவை கிராமமக்கள் பாராட்டினர்.இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ் பாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!