18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் கண்ணன் வழங்கினார்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் கண்ணன் வழங்கினார்…

எழுதியவர்: ஆசிரியர் April 18, 2020, 5:04 pm

விருதுநகர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மேலும் 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர்களும் விரைவில் வீடு திரும்புவார்கள். ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அருகில் இருப்பவர்களை 28 நாள்கள் தனிமைப்படுத்தி அவர்களை பாதுகாத்து வருகிறோம்.

விருதுநகர் மாவட்டத்தில் ஆரம்பத்தில் 3289 பேரை தனிமைபடுத்தப்பட்டது. அதில் 3080 பேர் தனிமைபடுத்தபட்ட 28 நாள்களை முடித்து விட்டார்கள். தற்போது 200 பேர் மட்டும் தனிமை படுத்தபட்டுள்ளனர். அவர்களும் 28 நாள்களை முடித்து விட்டால் நோய் தோற்று பரவவில்லை என்று உறுதி செய்யலாம் .

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பெரிதளவில் இல்லை என்று ஆய்வில் உறுதி செய்யபட்டுள்ளது. நகர் பகுதியில் தூய்மை பணிகள் குறைவாக உள்ளது என்று தெரியவந்தால் உடனடியாக தகவல் தெரிவித்தால் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் தூய்மை பணிகளை முழுமையடைய செய்ய வைக்க முடியும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அந்த மூன்று நபர்களை தவிர்த்தும் தற்போது அவர்களுக்கும் குணம் அடைந்து தொற்று இல்லை என உறுதி செய்யபட்டது. ஆகையால் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா தொற்று இல்லை என்ற நல்ல செய்தி வந்துள்ளது. இப்பகுதியில் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என ஆட்சியர் தெரிவித்தார். வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!