18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சொந்த செலவில் 21 நாட்களாக நாள்தோறும் 6,000 பேருக்கு உணவு வழங்கும் இராஜபாளையம சட்டமன்ற உறுப்பினர்..

சொந்த செலவில் 21 நாட்களாக நாள்தோறும் 6,000 பேருக்கு உணவு வழங்கும் இராஜபாளையம சட்டமன்ற உறுப்பினர்..

எழுதியவர்: ஆசிரியர் April 18, 2020, 4:58 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் வறுமையாலும் பசியால் வாடிக்கொண்டிருக்கும் சாலையோரம் குடியிருக்கும் பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றவர்கள் காவல்துறை என அனைவருக்கும் நாள்தோறும் மதிய உணவாக தக்காளி சாதம் லெமன் சாதம் போன்றவை தயார் செய்து 1,25,000 ரூபாயில் செலவில் நாள்தோறும் 6,000 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.

இந்த பணியை அவரே நேரில் சென்று உணவு தயாரித்து உணவு தரமாக இருக்கிறதா என்று ஆய்வு செய்து உணவு பொட்டலங்களை போட்டு ஆட்டோவில் ஏற்றி இராஜபாளையத்தில் உள்ள 24 ஊராட்சிகள் இரண்டு பேரூராட்சி 42 நகராட்சி வார்டுகள் என்று அனைத்து பகுதிகளுக்கு மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!