17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையத்தில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு…

இராஜபாளையத்தில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு…

எழுதியவர்: ஆசிரியர் April 18, 2020, 4:47 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் தடுப்பு கண்காணிப்பு குழு அலுவலர் கருணாகரன் ஐஏஎஸ் ஆய்வு செய்தார். கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பருப்பு, சமையல் சிலிண்டர் போன்றவைகள் சரியாக கிடைக்கிறதா? என்று மக்களிடம் கருத்து கேட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தூய்மை பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது,

விருதுநகர் மாவட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 தினங்களில் ஹாட்ஸ்பாட் பகுதி வரையறுக்கப் பட்டுள்ளது. குறிப்பாக இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் எட்டு இடங்களில் ஹாட்ஸ்பாட் என கண்டறியப்பட்டு அந்த இடங்களில் பொதுமக்கள் தனித்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. அவர்களுக்குரிய அத்தியாவசிய பொருள்களை பூர்த்தி செய்யும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்தப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது .

குறிப்பாக இராஜபாளையம் பகுதியில் குறிப்பிட்ட ஒரு ஏரியாவில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 869 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இராஜபாளையம் 380 பேருக்கு பரிசோதனை 260 நெகட்டிவ் என ரிசல்ட் வந்து உள்ளது. இன்னும் 42 பேருக்கு பரிசோதனை ரிசல்ட் வரவில்லை. தற்போது வரை மதுரையில் பரிசோதனை செய்ததில் பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட்டு வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!