17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி ஊரடங்கு உத்தரவு நாளில் வெளியில் சுற்றிய 665 பேர் கைது .246 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

உசிலம்பட்டி ஊரடங்கு உத்தரவு நாளில் வெளியில் சுற்றிய 665 பேர் கைது .246 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

எழுதியவர்: mohan April 18, 2020, 2:23 pm

தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அத்யாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தி உள்ளனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் ஊரடங்கு நாளில் அனுமதியின்றி பொது வெளியில் சுற்றிய 665 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றியவர்களின் 246 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதில் 51 இருசக்கர வாகனங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கபப்பட்டுள்ளதாக உசிலம்பட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!