18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் கருப்பசாமி வேடமணிந்து, காவல்த்துறையுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய நாடக கலைஞர்கள்

உசிலம்பட்டியில் கருப்பசாமி வேடமணிந்து, காவல்த்துறையுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய நாடக கலைஞர்கள்

எழுதியவர்: mohan April 18, 2020, 1:36 pm

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமல்லாது நமது தமிழகத்தையும் விட்டு வைக்க வில்லை, இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள சூழலில் தற்போதைய ஊரடங்கு காலத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதிக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பாதுகாப்பின்றி வரும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உசிலம்பட்டியைச் சேர்ந்த நாடக நடிகர் ஆத்தாடி குமார் தலைமையிலான குழுவினர் மற்றும் இணையதள நண்பர்கள் இணைந்து கருப்பசாமி வேடமணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உசிலம்பட்டி கோட்டாச்சியர் ராஜ்குமார் மற்றும் டி.எஸ்.பி.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வில் கருப்பசாமி வேடமணிந்திருந்தவர், கருப்பனே மாஸ்க் போட்டுறுக்கான் டா, காவல்த்துறையை எல்லையில் காவலுக்கு வச்சுருக்கான், கருப்பன் சொல்லுவதை கேளுங்க மக்களே என சாமியாடியபடி விழிப்புணர்வை ஏற்படுத்தியது பெரும் வரவேற்பை பெற்றது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!