17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊர் ஊராக சுற்றி ஜோதிட தொழில் செய்யும் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாயா வெங்கடேசன் நிவாரண உதவிகளை வழங்கினார்       

ஊர் ஊராக சுற்றி ஜோதிட தொழில் செய்யும் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாயா வெங்கடேசன் நிவாரண உதவிகளை வழங்கினார்       

எழுதியவர்: mohan April 18, 2020, 1:05 pm

 நாகை மாவட்டம்,செம்பனார்கோவிலிலில்  ஜோதிட தொழில் செய்யும் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை சமூக சேவகர் மாயா வெங்கடேசன் வழங்கினார். செம்பனார்கோவில் ரயிலடி பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ள ஜோதிட தொழில் செய்யும் 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி,பிஸ்கட்,பால் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் பொது நல மன்றத்தின் நிறுவன தலைவர் மாயா வெங்கடேசன் வழங்கினார்.ஊர் ஊராகச்சுற்றி கைஜோதிடம் பார்க்கும் தொழில் செய்யும் 80 க்கும் மேற்பட்டோர் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கூடாரங்களிலேயே முடங்கி அன்றாட உணவுக்காக தவித்து வந்ததாக கண்ணீர் மல்க கூறினர்.

கீழ்மாத்தூர்,பரசலூர் கிராம மக்களுக்கு நிவாரண உதவி செம்பனார்கோவில் அருகேயுள்ள கீழ்மாத்தூர்,பரசலூர்  கிராமங்களை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை,எளிய மக்களுக்கும்  மாயா வெங்கடேசன் அரிசி உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினார்.  திமுக ஊராட்சி தலைவர் விஜயேந்திரன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!