17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தாசிம்பீவி அப்துல்காதர் கல்லூரியில் தலைமைத்துவம் பற்றி பயிற்சி பட்டறை…

தாசிம்பீவி அப்துல்காதர் கல்லூரியில் தலைமைத்துவம் பற்றி பயிற்சி பட்டறை…

எழுதியவர்: ஆசிரியர் July 12, 2017, 9:32 pm

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்று (12.07.17) காலை 10 மணியளவில் ஆங்கிலத்துறையும் கணிதத்துறையும் இணைந்து நடத்திய தலைமைத்துவம்’ பற்றிய பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. A. முகம்மது அஃப்ரின் பானு, இளங்கலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி இறை வணக்கத்துடன் தொடங்கியது.  முனைவர்.R.புனிதா கணிதத்துறைத் தலைவர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் S.சுமையா தலைமையுரையாற்றினார்கள்.

S.மகுதூன் நிஷா, ஆங்கிலத்துறை துணைப்பேராசிரியர் நன்றியுரையாற்றினார். இதில் சிறப்புவிருந்தினர்களாக G.M ராதிகா மற்றும் N.பரிமளம் ஹரிராமன், ஆங்கிலத்துறை ஆகியோர் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. கல்லூரி மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!