17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை மக்களே.. ஸ்டைலா உங்கள் திறமையை உலகுக்கு காட்ட “Exotic Kilakkarai”.. பல பரிசுகள் காத்திருக்கிறது..

கீழக்கரை மக்களே.. ஸ்டைலா உங்கள் திறமையை உலகுக்கு காட்ட “Exotic Kilakkarai”.. பல பரிசுகள் காத்திருக்கிறது..

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2020, 10:15 pm

கீழக்கரையை மையமாக வைத்து இயங்கி வரும் ஸ்டைலிஷ் கீழக்கரை பக்கம் சார்பாக  “Exotic keelakarai” என்ற தலைப்பில் கீழக்கரை மக்கள் தங்கள்  திறமைகளை பல்வேறு தலைப்புகளில் வெளிக்காட்டும் விதமாக அறிவித்துள்ளனர்.

இப்போட்டி இந்த மாதம் 07/04/2020 தொடங்கி 30/04/2020 வரை பங்கு பெற வாய்ப்பளிக்கிறது. இதில் கீழக்கரை மக்கள் தங்கள் ஊரின் பாரம்பரியத்தை விளக்குவதுடன் தங்களின் தனித்தறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்பாகும். இப்போட்டியில் கட்டுரை, ஓவியம், கவிதை, நாடகம், கலை மற்றும் தனி நபர் திறமை என பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது.

மேலும் திறமையாளர்களை அவர்கள் பங்கு கொள்ளும் தலைப்பின் துறையில் உள்ள ஜாம்பாவன்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டு வெளி உலகுக்கு அடையாளம் காட்டப்படுவார்கள். இப்போட்டியில் கலந்து கொள்வது மூலம் இந்த ஊரடங்கு காலத்தில் உங்களுடைய திறமையை வெளிக் காட்டுவதற்கு நல்ல வாய்ப்பாகும்.

இந்த போட்டியில் கீழக்கரை பாரம்பரிய உணவு புகைப்படம், கீழக்கரையை பற்றி தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அனைவரும் ரசிக்கும்படி நீங்கள் எழுதி அனுப்பலாம், நமது கீழக்கரை தனித்துவங்களை பற்றி நீங்கள் ஒரு நிமிட வீடியோவாகவும் அல்லது ஆடியோ வாங்கவும் அனுப்பலாம். நீங்கள் எந்த திறமையை வேணாலும் இந்த போட்டியின் மூலம் வெளிப்படுத்தலாம் ஆனால் அது அனைத்தும் கீழக்கரையை பற்றி மட்டுமே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் அனுப்பும் ஏதேனும் பதிவுகள் கீழக்கரைக்கு சம்பந்தப்படாமல் இருக்குமாயின் அது இப்போட்டியில் இருந்து நிராகரிக்கப்படும்.

உங்களது பதிவுகளை [email protected] என்ற ஈமெயில் மூலம் அனுப்பலாம். மேலும் இப்போட்டியை பற்றிய மேல் விபரங்களுக்கு நிஷாத் என்பவரை  8098888409 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

EXOTIC KILAKKARAI போட்டி தலைப்புகள்

உங்கள் திறமைகளை தேர்ந்தெடுக்கும் ஜாம்பாவான்கள்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!