விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சிகுட்பட்ட 42 வார்டுகளிலும் காய்ச்சல் சளி போன்ற தொற்று உள்ளதா என கணக்கெடுக்கும் பணி மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இராஜபாளையம் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளிலும் கணக்கெடுக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை நகராட்சி சுகாதார அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கணக்கெடுக்கும் பணி மற்றும் தூய்மை பணியில் ஈடுபடுவர்களுக்கு அம்மா உணவகம் மூலம் பார்சல் செய்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் உணவை குப்பை வண்டி TATA ACEவாகனம் மூலம் உணவுகளை எடுத்துச் சென்று வினியோகம் செய்கின்றனர். நகராட்சி நிர்வாகம் இதுபோன்ற அலட்சியம் செய்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவளிப்பது வருத்தமளிக்கும் செயலாக உள்ளதாகவும், தூய்மை பணியாளர்கள் மற்றும் கணக்கு எடுக்கு பணியாளர்களுக்கு எந்த வித பாதுகாப்பு இல்லாத நிலையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டுகின்றறர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்










You must be logged in to post a comment.