வீ.கே.புதூர் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு தாசில்தார் ஹரிகரன் நிவாரண உதவி…
வீரகேரளம்புதூர் தாலுகாவில் 81 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு தாசில்தார் ஹரிகரன் நிவாரண உதவிகள் வழங்கினார்.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் சுரண்டை குறு வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமையில் உள்ள 36 பயனாளிகளுக்கும், ஊத்துமலை குறு வட்டத்தை சேர்ந்த 31 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு அரிசி, மற்றும் மளிகை பொருட்களை வீகேபுதூர் தாசில்தார் ஹரிகரன் நேரில் சந்தித்து வழங்கினார். நிகழ்ச்சியில் துணை தாசில்தார் சிவனு பெருமாள், ஆர்ஐ மாரியப்பன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.
அதே போன்று ,வாடியூர் கிராமத்தை சேர்ந்த முதியோர்,மாற்றுத் திறனாளிகள், விதவை, உடல்நலம் இல்லாமல் உழைக்க இயலாத 14 ஏழை குடும்பங்களுக்கு விஏஓ ஆறுமுகம் சொந்த செலவில் 10கிலோ அரிசி மற்றும் 11வகையான மளிகை பொருள்கள் அடங்கிய கொரானா நிவாரண தொகுப்பை வீகே புதூர் வட்டாட்சியர் ஹரிகரன் வழங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் சிவன்பெருமாள், கருவந்தா வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.