தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த வெவ்வேறு கிராமத்தைச் சேர்ந்த இருவர் கைது 10 லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளன இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் கிராமப் பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் விற்பதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு தகவல் கிடைத்தது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் பாலக்கோடு அடுத்து மாரண்டஹள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்கானிப்பில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக குடிபோதையில் வந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்ததில் கரகூர், வட்டகாம்பட்டி ஆகிய பகுதிகளில் சாராயம் 1 லிட்டர் 1000 முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்வதாக தகவல் அளித்தார் அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் கரகூர் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் (35) வட்டகானம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (58) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிம் இருந்த 10 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்து மாரண்டஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரண்ட அள்ளி பகுதியில் மீண்டும் கள்ள சாராயம் காய்ச்சியதாக இருவர் கைது!
எழுதியவர்: Askar April 17, 2020, 8:30 pm




You must be logged in to post a comment.