17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவிட்- 19 வைரஸ் தொற்று நிவாரண நிதியாக தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள்!

கோவிட்- 19 வைரஸ் தொற்று நிவாரண நிதியாக தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள்!

எழுதியவர்: Askar April 17, 2020, 7:57 pm

கோவிட்- 19 வைரஸ் தொற்று நிவாரண நிதியாக தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள்!

உலகையே உலுக்கி அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று தமிழகத்திலும் பெறும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி உள்ளது.இதற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியாக சுமார் 500 கோடி வழங்கியுள்ளது; தொழிதபர்கள் உட்பட பலதரப்பட்ட வசதி படைத்தவர்களும் தமிழக அரசுக்கு நிவாரண நிதி வழங்கி வரும் சூழலில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்கியுள்ளனர். இதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை கொரோனோ நோய் தொற்று நிவாரண நிதியாக ஆத்தூர் வட்டாட்சியர் திரு.அரவிந்த் அவர்களிடத்தில் வழங்கினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!