17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பகுதியில் வறுமையில் வாடும் சலவை தொழிலாளர்களுக்கு சலவை தொழிலாளர் பேரவை சார்பில் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி

உசிலம்பட்டி பகுதியில் வறுமையில் வாடும் சலவை தொழிலாளர்களுக்கு சலவை தொழிலாளர் பேரவை சார்பில் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி

எழுதியவர்: mohan April 17, 2020, 7:48 pm

உசிலம்பட்டி பகுதியில் வறுமையில் வாடும் சலவை தொழிலாளர்களுக்கு சலவை தொழிலாளர் பேரவை சார்பில் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிக்குட்பட்ட பாப்பாபட்டி காலணி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, இ.நடுப்பட்டி, துரைச்சாமிபுரம்புதூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

தற்போதைய ஊரடங்கு காரணமாக தங்கள் வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் இந்த சலவை தொழிலாளர்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை சார்பில் அதன் மாநில இளைஞரணி செயலாளர் மகேஸ்வரன் தனிப்பட்ட முறையில் சொந்த செலவில் சுமார் 100 குடும்பத்தினருக்கு கிராமம் கிராமமாக சென்று 10 தினங்களுக்கு தேவையான அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்தார்.வறுமையில் வாடிய மக்களுக்கு தனி ஆளக சொந்த செலவில் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய மகேஸ்வரனுக்கு சலவை தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!