18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே தூய்மை பணியாளர்களை கௌரவித்து, இலவசமாக அத்தியாவசிய பொருட்களை வங்கிய ஊராட்சி பணியாளர்கள்

உசிலம்பட்டி அருகே தூய்மை பணியாளர்களை கௌரவித்து, இலவசமாக அத்தியாவசிய பொருட்களை வங்கிய ஊராட்சி பணியாளர்கள்

எழுதியவர்: mohan April 17, 2020, 7:25 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டி ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களில் தற்போதைய ஊரடங்கு காலத்தில் தினந்தோறும், சுத்தமாக வைப்பது, கிருமி நாசினி தெளிப்பது, குப்பைகளை சேகரிப்பு என அன்றாட வாழ்வில் ஓய்வின்றி பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கௌரவப் படுத்தும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவ படுத்தினர் ,

மேலும் ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர், துணைத் தலைவர் என அனைவரும் ஒன்றிணைந்து நிதி திரட்டி தூய்மை பணியாளர்களுக்கு 10 தினங்களுக்கு தேவையான அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஊராட்சி பணியாளர்கள் வழங்கினர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!