17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் எஸ்ஒஆர் நகர் பகுதி சீல் வைக்கப்பட்டு ட்ரோன் மூலம் அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.

உசிலம்பட்டியில் எஸ்ஒஆர் நகர் பகுதி சீல் வைக்கப்பட்டு ட்ரோன் மூலம் அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.

எழுதியவர்: mohan April 17, 2020, 7:07 pm

தமிழகத்தில கொரோனா வைரஸ் தொற்றால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் உள்ளது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எஸ்ஒஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 2 பேர் டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய நிலையில் அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை தோப்பூர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளார்.

இந்நிலையில் அவர் வசித்த எஸ்ஒஆர் நகர் பகுதியை போலிசார் தடை செய்து சீல் வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதையும் மீறி எஸ்ஒஆர் நகர் பகுதிக்குள் சிலர் வெளியில் சுற்றியதால் போலிசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.மேலும் தடை செய்யப்பட்ட எஸ்ஒஆர் நகர் பகுதிக்குள் ஆட்கள்; நடமாட்டமம் உள்ளதா என போலிசார் -நகராட்சி- சுகாதாரத் துறையினா் ஆகியோர் ட்ரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.ஆட்கள் நடமாட்டம் இருந்தால் அவர்கள் அடையாளம் காணப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவர் என உசிலம்பட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜா தெரிவித்தார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!