18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வைத்தீஸ்வரன்கோயிலில் சத்தான சமையல்செய்யும் இல்லத்தரசிகளுக்கு பரிசு தரும் பேரூராட்சி

வைத்தீஸ்வரன்கோயிலில் சத்தான சமையல்செய்யும் இல்லத்தரசிகளுக்கு பரிசு தரும் பேரூராட்சி

எழுதியவர்: mohan April 17, 2020, 6:31 pm

கொரோனா வைரஸ் நோய் எதிர்க்க வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் .இந்நிலையயில் கொரோனா வை தடுக்க தனி மனித நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த முடிவெடுத்தார்.நோய் எதிர்ப்பு சக்திக்கு சத்தான உணவு உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய உணவுகளை சமைத்து சாப்பிட இல்லத்தரசிகளுக்கு முகநூல் மற்றும் வாட்ஸ் அப் வழியே பங்கு பெறும் சமையல் போட்டியை பேரூராட்சி செயல் அலுவலர் கு. குகன் அறிவித்துள்ள்ளார்.

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி முக நூல் பக்க்கத்தில் இன்றைய உணவு என்ற தலைப்பில் வெளியிடப்படும் உணவை வீட்டில் தயாரித்து சாப்பிடும் போட்டோவினை முகநூல் அல்லது வாட்ஸ் அப் வழியே அனுப்புவோருக்கு பேரூராட்சி மூலம் பரிசு அளிக்கப் படுகிறது.இது குறித்து செயல் அலுவலர் கு. குகன் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் கிருமி நாசினி தெளிப்பது சமூக இடைவெளி காப்பதுடன் பேரூராட்சியின் பணி முடிந்து விட்டதாக நினைக்க வில்லை. கோரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தனி மனித நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சத்தான உணவுகளை பொதுமக்களை உண்ண வைக்க இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது என்கிறார்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!