18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு…….

கீழக்கரையில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு…….

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2020, 6:09 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னக்கடை தெருவைச் சேர்ந்த முதியவர் சென்னையில் மரணமடைந்து கீழக்கரையில் அடக்கம் செய்யப்பட்ட பின்பு அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சின்னக்கடை தெரு பகுதியில் சுகாதார துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. பின்பு அவருடைய மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

இன்று 17.04.2020 கீழக்கரையில்  தென் மண்டல காவல்துறைத் தலைவர் IG சண்முக ராஜேஸ்வரன், இராமநாதபுரம்  சரக காவல்துறை துணைத் தலைவர் DIG ரூபேஸ் குமார் மீனா, இராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் SP வருண்குமார் மற்றும் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் DSP முருகேசன் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

நகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதிக்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்று கேட்டறிந்தார்கள். பின்பு அப்பகுதி பொதுமக்களினமும் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்கள்.

கீழை நியூஸ் SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!