17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்…

மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்…

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2020, 1:58 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பழங்காநத்தம் நேதாஜி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி அப்பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சுப்பிரமணியபுரம் காவல்துறை ஆய்வாளர் சக்கரவர்த்தி  மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாக செய்து தரப்படும் எனவும், தங்கள் பகுதியில் நான்கு புதிய சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்படும் எனவும் மாநகராட்சி உயரதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின் உடனடியாக மாநகராட்சி லாரி மூலமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் “தங்குதடையின்றி தங்களுக்கு குடிநீர் கட்டாயம் வரும்“ என உறுதியளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!