18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தரங்கம்பாடி பகுதியில் கொரோனா தொற்றால் பாதித்தவா் பகுதியில் தடை

தரங்கம்பாடி பகுதியில் கொரோனா தொற்றால் பாதித்தவா் பகுதியில் தடை

எழுதியவர்: mohan April 17, 2020, 1:43 pm

24.வது நாளாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் பகுதியை சேர்ந்த 2 கொரானா தொற்று குறித்த மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறையார் காய்கறி மார்க்கெட் முதல் பழைய பேருந்து நிலைய சாலைகள் தடை செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகள் வழியாக வெளி நபர்கள் செல்ல தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் பெறுவதற்கு சிறமம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் கிடைக்க பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரா. யோகுதாஸ்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!