கொரோனா தடுப்பு பணிகளில் தூய்மை பணியாளர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்-நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கி தென்காசி எம்எல்ஏ பேச்சு…
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தூய்மைப் பணியாளர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சுரண்டை டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு முககவசங்கள், மற்றும் நிவாரண பொருட்களை தென்காசி எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழங்கி சுகாதார பணியாளர்களிடையே பேசினார். அதில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிகளில் தமிழக அரசு முதல்வர் மற்றும் துணை முதல்வரின் வழிகாட்டுதல்படி சிறப்பாக செயல்படுகிறது. இந்த பணியில் தூய்மை பணியாளர்கள் பங்கு மிக முக்கியமானதாகும்.
தூய்மை பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் படி செயல்பட வேண்டும். இன்னும் விழிப்புடன் பணியாற்றி கொரோனாவை தடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் பணி அளப்பறியது என்று கூறிய அவர் தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர அதிமுக செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் குணம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ், நகர அவைத்தலைவர் முருகையா, கோபால், கீழச்சுரண்டை மாரியப்பன், சங்கர், ஜவஹர் தங்கம், சிவா, ஜெயசந்திரன், சிவசங்கர், ஞானசேகர், நல்லசிவன், முருகன், பழனி, வெள்ளைத் துரை, திருமலை முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.