தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.இந்த ஊரடங்கு நாளில் பொது வெளியில் சுற்றியவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் வந்த
வாகனங்களும் போலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் வெளியில் சுற்றிய 400 பேர் மீதும் வழக்குப்பதிவும் 190 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல்துறையினரால் அதன் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.உசிலம்பட்;டி நகர் காவல் நிலையத்தில் உசிலம்பட்டி பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிய ஆவணங்களை சரிபார்த்தபின் வண்டியில் பெயிண்டால் கோடு போட்டு (பறிமுதல் செய்யப்பட்ட வண்டி என்ற அடையாளத்திற்காக ) பின் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.முதற்கட்டமாக சுமார் 30 இருசக்கர வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.
உசிலம்பட்டியில் ஊரடங்கு நாளில் பறிமுதல் செய்யப்பட்ட வண்டிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
எழுதியவர்: mohan April 16, 2020, 5:53 pm




You must be logged in to post a comment.