17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் பெண் தவற விட்ட நகை பை கண்டெடுத்த பெண்ணின் நேர்மைக்கு பாராட்டு

ராமநாதபுரம் பெண் தவற விட்ட நகை பை கண்டெடுத்த பெண்ணின் நேர்மைக்கு பாராட்டு

எழுதியவர்: mohan April 16, 2020, 5:08 pm

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மனைவி செல்வி, 26. இவர், கீழச்செல்வனூர் கோட்டையேந்தலில் உள்ள தந்தை வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் இன்று காலை கிளம்பினார்.பையில் வைத்து எடுத்து வந்த 10 பவுன் நகை, பள்ளி சான்றுகள், ரூ. 1000 ஆகியன வழியில் தவறி விழுந்து விட்டதாக, சிக்கல் காவல் போலீசில் செல்வி புகார் அளித்தார். இதன்படி சிக்கல் சிறப்பு சார்பு ஆய்வாளார் மலைராஜ் , காவலர் முரளி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது செல்வி தவற விட்ட பொருட்கள் அடங்கிய பையை வழியில் கண்டெடுத்ததாக சிக்கல் வடக்கு தெருவைச் சேர்ந்த நாகவேல் மனைவி சந்தனமாரி போலீசில் ஒப்படைத்தார். தவறவிட்ட பொருட்களை ஒரு மணி நேரத்தில் பெற்றுக்கொண்ட செல்வி, சிக்கல் போலீசார் , சந்தனமாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கீழே கிடந்த பொருளை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த சந்தன மாரியை சிக்கல் போலீசார் பாராட்டினர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!