இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு 23 வது நாளான இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏழு நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில்
ஊராட்சி ஒன்றியம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் மருத்துவர்கள் துப்புரவு பணியாளர்கள் செவிலியர்கள் முழு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காக கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அறிவிப்பை மீறி செல்லும் நபர்களை கண்டித்து அவர்களை எச்சரித்தும் வருகின்றனர்.
இரா.யோகுதாஸ்,மயிலாடுதுறை.




You must be logged in to post a comment.