17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கொரோனா தொற்று காரணமாக காவல்துறை கட்டுப்பாட்டில் வந்த மதுரை மஹ்பூப்பாளையம் பகுதி..

கொரோனா தொற்று காரணமாக காவல்துறை கட்டுப்பாட்டில் வந்த மதுரை மஹ்பூப்பாளையம் பகுதி..

எழுதியவர்: ஆசிரியர் April 16, 2020, 2:46 pm

கொரோனா தொற்று இருவருக்கு உறுதியானதஎ அடுத்து மதுரை மகபூப்பாளையம் சுற்றியுள்ள பகுதிகளை காவல்துறை,  மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்தப் பகுதிக்கு யாரும் வெளியாட்கள் உள்ளே வராத வகையிலும்,  அப்பகுதி பொதுமக்களும் வெளியே வராத வகையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது எனவும் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியமான மற்றும் மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்படும் எனவும், தேவைப்படும் நபர்கள் பொருட்களின் விவரங்களை தகவல் தெரிவித்தால் வீட்டிற்கே வந்து சேரும் என காவல்துறை மற்றும் அப்பகுதி ஜமாத்தார் சார்பாக ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு செய்து வருகிறார்கள். அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

வி காளமேகம் செய்தியாளர் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!