18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டையில் செயல்படும் வங்கிகளில் துரிதமாக நகை கடன் விவசாய கடன் வழங்கிட பொதுமக்கள் கோரிக்கை..

சுரண்டையில் செயல்படும் வங்கிகளில் துரிதமாக நகை கடன் விவசாய கடன் வழங்கிட பொதுமக்கள் கோரிக்கை..

எழுதியவர்: mohan April 16, 2020, 1:56 pm

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் வணிக நகரமான சுரண்டையில் 10 அரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளது. இவ்வங்கிகள் வழக்கம் போல செயல்படுகிறது. சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தி வங்கி அலுவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.இந்நிலையில் குறைந்த எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர். இதனால் வங்கிக்கு வெளியே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.இருப்பினும் நகைகடன், விவசாய கடன் உள்ளிட்ட பல சேவைகள் கிடைக்காத நிலையும் உள்ளது. ஏற்கனவே ஊரடங்கினால் வேலை மற்றும் வருவாய் இல்லாத நிலையில் கடன்களும் கிடைக்காததால் மக்கள் தனியாரிடம் அதிக வட்டிக்கு வாங்கும் நிலை உள்ளதால் அதிக கஷ்டத்துக்கு உள்ளாகின்றனர்.எனவே வங்கி நிர்வாகங்கள் உடனடியாக நகைகடன் மற்றும் விவசாய கடன்களை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!