18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகுளத்தூர், கமுதி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரெட் கிராஸ் அத்தியாவசியப் பொருட்கள்

முதுகுளத்தூர், கமுதி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரெட் கிராஸ் அத்தியாவசியப் பொருட்கள்

எழுதியவர்: mohan April 16, 2020, 11:33 am

இராமநாதபுரம் மாவட்டம் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் கமுதி, முதுகுளத்தூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் ரா.இளவரசி முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் செ.மாலதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். 120 தூய்மை பணியாளர்களுக்கு சோப்,முகக்கவசம் , கையுறை, பிஸ்கட் பாக்கெட், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கமுதி தாசில்தார் செண்பகலதா, ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் வழங்கினர்.முதுகுளத்தூர் வட்டார ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரை பாண்டியன், இராமநாதபுரம் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் எம். ரமேஷ்,ரெட் கிராஸ் பொருளாளர் சி.குணசேகரன் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!