மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்த சந்திரலேகா என்பவர் மதுரை – பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் சமூக பணித்துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.சமூக பணி செய்வதில் ஆர்வம் கொண்ட இந்த மாணவி தற்போதைய கொரோனா பாதிப்பு துவங்கிய நாள் முதல் தற்போது வரை எழுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காவல்த்துறை மற்றும் பேரூராட்சி உதவியுடன் தனிஒரு பெண்ணாக கொரோனா குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.
குறிப்பாக ஆரம்ப காலத்திலிருந்து தற்போது வரை கபசுர குடிநீர் மற்றும் சுமார் 1000க்கும் அதிகமான மாஸ்க் – களை பொதுமக்கள் மற்றும் காவல்த்துறை, தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் இலவசமாக வழங்கி வரும் இந்த கல்லூரி மாணவிக்கு அந்த பகுதியில் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
உசிலை சிந்தனியா









You must be logged in to post a comment.