தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெலமாரன அள்ளி ஊராட்சி மேல் பாவிளி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன கடந்த 3 மாதமாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகம் குறைந்துள்ளதால் இன்று காலை ஒகேனக்கல் குடிநீர் அரவே வராததால் குடிநீர் கேட்டு 100ற்கும் மேற்பட்ட பெண்கள் சமூக இடைவெளி விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்த மாரண்டஅள்ளி காவல்துறையினர் விரைந்து வந்து சாலை மறியல் செய்த கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்பு சாலை மறியலில் இருந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
பாலக்கோடு அருகே இன்று காலை குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து சாலை மறியல்..
எழுதியவர்: Askar April 16, 2020, 9:28 am




You must be logged in to post a comment.