18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இடங்கணசாலை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பணிகளை பாராட்டி உணவுப்பொருட்கள் வழங்கிய பொதுமக்கள்..

இடங்கணசாலை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பணிகளை பாராட்டி உணவுப்பொருட்கள் வழங்கிய பொதுமக்கள்..

எழுதியவர்: Askar April 16, 2020, 9:11 am

இடங்கணசாலை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பணிகளை பாராட்டி உணவுப்பொருட்கள் வழங்கிய பொதுமக்கள்..

மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சி பகுதிகளில் தூய்மைப்படுத்தி எவ்வித தொற்று நோய்களும் பரவாமல் தடுத்துவரும் தூய்மைப் பணியாளர்களை பார்ட்டி அவர்களது பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 11.வது வார்டு செட்டியார் தெரு பொதுமக்கள் 5 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 60.உணவு பொருட்கள் பைகளை பேரூராட்சி செயல் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் வழங்கினார். அப்பொருட்களை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் உள்பட்ட 60-ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!