18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோரிக்கை மனு அளித்தே நிவாரணம் பெற வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்ட மாற்றுத்திறனாளிகள்..

கோரிக்கை மனு அளித்தே நிவாரணம் பெற வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்ட மாற்றுத்திறனாளிகள்..

எழுதியவர்: Askar April 15, 2020, 8:45 pm

கோரிக்கை மனு அளித்தே நிவாரணம் பெற வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்ட மாற்றுத்திறனாளிகள்..

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகளால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.தங்களின் அவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாழ்வாதார அவசிய தேவைகளுக்காக கோரிக்கை மனுக்களை அளித்தே பெற வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உணவில்லாமல் தவித்து வருவது தொடர்பாகவும், மத்திய, மாநில அரசுகள் இதுவரை நிவாரணம் வழங்காத நிலையில் ஊரடங்கு உத்தரவு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் உடனடியாக அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்களது வாழ்வாதாரத்திற்க்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் பழனி சார் ஆட்சியர் அவர்களிடம் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பழனி நகர செயலாளர் தங்கவேல், மாவட்டக்குழு உறுப்பினர் கோபிநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் பகத்சிங் ஆகியோர் 15.04.2020 காலை பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மாற்றுத்திறனாளிகளின் அவசிய தேவைகளை ஊரடங்கு காலத்திலும் கோரிக்கை மனுவாக அளித்து பெற வேண்டிய இந்த அவலம் மாற்றப்பட்டு மத்திய மாநில அரசுகள் மாற்றுத்திறன் படைத்தோரின் முக்கிய தேவைகளை அறிந்து மனு அளிக்கும் முன்பே உதவ முன்வர வேண்டும் என்பதே தமிழக மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!