17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் சுமார் 100க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை…..

கீழக்கரையில் சுமார் 100க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை…..

எழுதியவர்: ஆசிரியர் April 15, 2020, 8:18 pm

கடந்த 2.4.2020 அன்று கிழக்கரை சின்னக் கடைத் தெருவைசேர்ந்த முதியவர் சென்னையில் மரணமடைந்தார். 3.4.2020 அன்று கீழக்கரையில் அடக்கம் செய்யப்பட்ட பின்பு 5.4.2020 அன்று அந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கீழக்கரை முழுவதும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டுக்கு வந்தது.

சில தினங்களுக்கு முன்பு அவருடைய மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று வட்டார மருத்துவர்  ராசிக்தீன் தலைமையில் கீழக்கரை சின்னக்கடை தெரு பகுதியை சார்ந்த சுமார் 100 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கீழக்கரை அரசு மருத்துவமனையில் வைத்து நடைபெற்று வருகிறது.

கீழை நியூஸ் SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!