17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேடித்தேடி உதவிகள் செய்யும் கடமலைக்குண்டு காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார்!

தேடித்தேடி உதவிகள் செய்யும் கடமலைக்குண்டு காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார்!

எழுதியவர்: Askar April 15, 2020, 8:11 pm

தேடித்தேடி உதவிகள் செய்யும் கடமலைக்குண்டு காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார்!

வரும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்ப்பட்டுள்ள காரணத்தால் வட மாநில தொழிலாளர்கள் தங்களின் ஊர்களுக்கு செல்வது சிரமம் ஆகிவிட்ட நிலையில் மயிலாடும் பாறையில் வட மாநில தொழிலாளர்கள் சிலர் உணவு போன்ற அத்தியாவசிய தேவைகள் இன்றி சிரமப்படுவதாக கடமலைக்குண்டு ஆய்வாளர் சுரேஷ் குமார் அவர்களுக்கு தகவல்கள் கிடைத்ததை அடுத்து நேரிடையாக அந்த இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.வட மாநில தொழிலாளர்கள் சிலர் கஷ்டப்படுவதை அறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறி முதல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தம்மால் இயன்ற பண உதவியும் செய்து விட்டு பிறகு கிராம பஞ்சாயத்து மூலமாக இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் முனிசாமி கூறும்போது;காவல் ஆய்வாளர் திரு சுரேஷ் குமார் அவர்கள் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் எப்போது பணியில் சேர்ந்தவர்களும் அப்போதிருந்தே மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு உதவும் கரமாக திகழ்கிறார். வட மாநிலத் தொழிலாளர்களுக்கு பெரிய உதவிகளை செய்து அவர்களின் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதுபோன்ற காவல்துறை அதிகாரிகள் கிடைக்கப்பெற்றது இப்பகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறினார்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!