18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் வங்கிகள் காலவரையற்ற அடைப்பு… ATM இயந்திரத்தில் பணம் இல்லை… வஞ்சிக்கப்படும் கீழக்கரை..

கீழக்கரையில் வங்கிகள் காலவரையற்ற அடைப்பு… ATM இயந்திரத்தில் பணம் இல்லை… வஞ்சிக்கப்படும் கீழக்கரை..

எழுதியவர்: ஆசிரியர் April 15, 2020, 7:08 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி 14.4.2020 முதல் அனைத்து வங்கிகளும் காலவரையின்றி மூடப்பட்டதால்  பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதைப்பற்றி கீழக்கரை சமூக ஆர்வலர்கள் கூறுகையில் கொரோனா பாதிப்படைந்த வீட்டுப் பகுதிகளில் எந்த வங்கிகளும் இல்லை.  அனைத்து வங்கிகளும் கீழக்கரை பிரதான சாலையில் தான் அமைந்துள்ளது. மக்கள் தேவைக்காக பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகைப் பொருள்கள், பால், இறைச்சி கடைகள் திறந்திருக்கும் பட்சத்தில்.வங்கியை மட்டும் மாவட்ட நிர்வாகம் அடைத்தது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

மேலும் வங்கி நிர்வாகங்கள் அறிவித்தது போல் ATM இயந்திரங்களிலும்  பணம் இல்லை இல்லாமல் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். இதனால்  முதியோர் உதவித்தொகை, அரசு சார்பில் அளிக்கும் உதவித்தொகையை எடுக்க முடியாமலும், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் சம்பள பணத்தை கூட எடுக்கமுடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.  வங்கி நிர்வாகத்தின் இச்செயல் மக்களை பலி வாங்கும் எண்ணத்தில் நடைபெறுகிறதோ என்ற எண்ணமும் எழுகிறது.

உடனடியாக இந்த விசயத்தில்  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வங்கி சேவையை தொடங்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கீழை நியூஸ் SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!