17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல்துறை ஆய்வாளரின் அதிரடி கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்.

காவல்துறை ஆய்வாளரின் அதிரடி கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்.

எழுதியவர்: mohan April 15, 2020, 6:36 pm

மதுரை நகர் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதனகலா  காய்கறி மார்கெட்டில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுவினருடன் இணைந்து கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் இவர் திருப்பரங்குன்றம் மலை பகுதியில் உள்ள வாழும் விலங்கினங்களுக்கு குடிநீர் உணவு உள்ளிட்ட வழங்கி உயிர்களை காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள் என எச்சரித்து அனுப்பி வைக்கிறார். இதனால் அப்பகுதியில் கொரோனா தொற்று வருவது தடுக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் காவல்துறை ஆய்வாளரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள் மேலும் மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் இவரை பாராட்டி வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!