திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தல் படி, மண்டபம் பேருராட்சி தூய்மை காவலர்கள்
மற்றும் ஊழியர்களுக்கு மண்டபம் பேரூர் திமுக., சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. நகர் செயலர் டி.ராஜா, (பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்) , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத்ராஜா (பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்) அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினர். தெற்கு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குநர் ரா.ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் எஸ்.பகுர்தீன், ஒன்றிய பிரதிநிதி எஸ்.தில்லைக்குமார், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி டி.வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபம் பேரூர் ஊழியர்களுக்கு திமுக., சார்பில் நிவாரணம்
எழுதியவர்: mohan April 15, 2020, 5:45 pm




You must be logged in to post a comment.